
சூர்யா, அனுஷ்கா நடித்துள்ள சிங்கம் படத்தின் தெலுங்குப் பதிப்பு ஜூலை 2ம் தேதி ரிலீஸாகிறதாம்.
யமுடு என்ற பெயரில் சிங்கம் படத்தை தெலுங்கில் டப் செய்துள்ளனர். இந்த பதிப்பு ஜூலை 2ம் தேதி ஆந்திரா முழுவதும் ரிலீஸாகிறது.
இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இதில் சூர்யா, அனுஷ்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது சூர்யா பேசுகையில், நான் தெலுங்கு ரசிகர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் எனது தெலுங்குப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இது எனது 25வது படம். ஹரி இயக்கத்தில் 3வது படம். தமிழ்நாட்டில் 550 பிரிண்டுகளுடன் படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
நான் அனுஷ்காவின் தீவிர ரசிகன். அவருடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளது பெருமையாக இருக்கிறது என்றார்.
பேட்டியின்போது அனுஷ்கா கூறியது. இன்னும் சிங்கம் படத்தை இதுவரை பார்க்கவில்லையாம் அனுஷ்கா. ஆனால் டப்பிங் பதிப்பை அவர் பார்த்து விட்டாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், இன்னும் நான் சிங்கம் படத்தை பார்க்கவில்லை. ஆனால் யமுடு படத்தைப் பார்த்தேன். டப்பிங் படம் போலவே தெரியவில்லை.
தேவிஸ்ரீபிரசாத்தின் இசை மயக்குகிறது. அதிரடியாக இருக்கிறது. தெலுங்கு ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிதும் விரும்புவார்கள்.
No comments:
Post a Comment