
ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா இணையும் இரண்டாவது படம் 7ஆம் அறிவு. இதில் சூர்யா ஜோடியாக ஸ்ருதி கமல் நடிப்பதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை தயாரிப்பதும் தெரிந்த விஷயங்கள்.
படத்தின் முதல் ஷெட்யீல்டை சீனாவில் வைக்க முருகதாஸ் முடிவு செய்திருந்தார். சீனாவில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதாக திட்டம். ஆனால் ரத்த சரித்திரம் படத்தின் இறுதிகட்ட பணிக்காக சூர்யா சென்னையிலேயே தங்க நேர்ந்ததால் முருகதாஸும் சீனா பிளானை தவிர்த்து சென்னையில் 7 ஆம் அறிவு படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.
கடந்த சில தினங்களாக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சூர்யா மற்றும் ஸ்ருதி கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை முருகதாஸ் படமாக்கி வருகிறார்.
ரவி.கே.சந்திரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
No comments:
Post a Comment