BEST MOVIE OF SURYA
Friday, July 16, 2010
நான் கமல் சாரோட ரசிகன் - சூர்யா
இன்றைய தேதியில் கலெக்சன் மாஸ்டர் நடிகர் சூர்யா. இவரது சிங்கம் பாக்ஸ் ஆஃபிஸில் கர்ஜித்துக் கொண்டேயிருக்கிறது.பத்திகையாளர்களுடனான அவரது உரையாடலிலிருந்து...
சிங்கம் படத்தை தேர்வு செய்ய என்ன காரணம்?
ஹரி சார் கதை சொன்ன விதமும், கதாபாத்திர வடிவமைப்பும் எனக்குப் பிடித்திருந்தது. படிக்கிற காலத்தில் கிராமத்துக்கு தவறாமல் போவேன். இப்போதெல்லாம் போக முடியிறதில்லை. அந்தக் குற்றவுணர்வு எனக்கு இருந்துகிட்டேயிருக்கு. என் கிராமத்தை திரும்பிப் பார்க்கிற படமா சிங்கம் இருந்ததால்தான் அதில் நடித்தேன்.
படத்தின் பெயர் அளவுக்கு உங்க மீசையும் பிரபலமாகிவிட்டதே...?
நான் கமல் சாரோட ரசிகன். அவரது தேவர் மகன் படம் மேல எனக்கு ரொம்பவே ஈடுபாடு உண்டு. அந்த கதாபாத்திரத்தின் பாதிப்புதான் இந்த மீசை.
ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணைந்திருக்கிறீர்கள்...
கஜினிக்குப் பிறகு முருகதாஸுடன் 7ஆம் அறிவு படத்தில் இணைந்திருக்கிறேன். தமிழில் அடுத்த பத்தாண்டுகளுக்கு பேசப்படும் படமாக 7ஆம் அறிவு இருக்கும். அந்தளவுக்கு வித்தியாசமான கதை. ரசிகர்களைப் போலவே நானும் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
திடீரென்று இந்திப் படத்திலும் நடிக்கிறீர்களே?
பல வருடமாக இந்தியில் நடிக்கச் சொல்லி பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாமே நான் தமிழில் நடித்தது போன்ற கேரக்டர்கள். வித்தியாசமாக ஏதாவது கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்றிருந்தேன். அப்படி வந்ததுதான் ரத்த சரித்திரம் படம். நான் எதிர்பார்த்த வித்தியாசமான கேரக்டர்.
இந்தியில் யார் டப்பிங் பேசியது?
நானேதான் இந்திக்கும் டப்பிங் பேசினேன். உணர்ச்சிகள்தான் முக்கியம். வசனத்துக்காக ரொம்ப சிரமப்பட வேண்டாம்னு வர்மா சார் ஊக்கப்படுத்தியதால் ஈஸியாக டப்பிங் பேச முடிந்தது.
படத்தின் கதை என்ன?
எந்தச் சூழ்நிலையில் மனிதனின் கோபம் கொலை செய்யும் அளவுக்குப் போகிறது, அந்த கோபத்தால் அவர்களுக்கு கிடைப்பது என்ன என்பதைத்தான் இந்தப் படத்தில் வர்மா சார் சொல்லியிருக்கார். தமிழ், இந்தி, தெலுங்கு மூன்று மொழிகளில் படம் தயாராகியிருக்கு. இதில் தெலுங்கு, இந்தியில் படம் இரண்டு பார்ட்டாக வெளிவரும். தமிழில் இரண்டையும் சேர்த்து ஒரே படமாக வெளிவரும்.
ஆறு, சிங்கம் மாதிரியான படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறீர்களா?
எல்லா தரப்பு ரசிகர்களும் என்னுடைய படங்களைப் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் படங்களை தேர்வு செய்கிறேன். கஜினிக்குப் பிறகு ஆறு படத்தில் நடித்த போது பலரும் அதுபற்றி கேட்டார்கள். ஆறு மாதிரியான படத்தில் நடிக்கலைன்னா நான் எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்று சேர்ந்திருக்க முடியாது. இப்போ சிங்கம் ஏ, பி, சி-ன்னு எல்லா சென்டர்களிலும் நல்லா போயிருட்டிருக்கு.
இனி ஆக்சன் படங்கள்தான் நடிப்பீர்களா?
தேவர் மகன், அலெக்ஸ் பாண்டியன் மாதியான ஆக்சன் கலந்த சென்டிமெண்ட் படங்கள்தான் எனக்குப் பிடிக்கும். ரசிகர்களுக்கு என்னுடைய ஆக்சன் படங்கள் பிடிச்சிருக்கு. அதனால்தான் தொடர்ந்து ஆக்சன் படங்களாக நடிக்க வேண்டியிருக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment