
தமிழ் சினிமாவின் தற்போது வெற்றி நாயகனாக திகழும் சூர்யா, அவ்வப்போது சமூககத்திற்காகவும் சில நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அவரின் அறக்கட்டளையின் மூலம் ஏழை மாணவர்களின் படிப்பிற்காக உதவுவது போன்ற நல்ல செயல்களில் ஈடுபட்டு வரும் சூர்யா தமிழக அரசுக்காக குறும்படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.
சாலை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பின்பற்றப்பட வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கமும் இணைந்து ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளது. இதில் சூர்யா நடித்திருக்கிறார்.
இந்த குறும்படத்தை இன்று (மே 28) தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தலைமைச் செயலத்தில் பார்வையிட்டார். (டிஎன்எஸ்)
No comments:
Post a Comment