
இயக்குநர்களின் கனவாக திகழ்கிறார் நடிகர் சூர்யா என்று பாராட்டியுள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.
ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ரத்த சரித்ரா.இப்படத்தில் சூர்யாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ள ராம் கோபால் வர்மா, சூர்யாவைப் புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இயக்குநர்களின் கனவாக திகழ்கிறார் சூர்யா முக பாவனைகள், கேரக்டருக்கேற்றார் போல மாற்றிக் கொள்ளக்க ூடிய அருமையான உடல் கட்டு ஆகியவற்றுடன் சிறந்த நடிகராகவும் திகழ்கிறார் சூர்யா.
பலருக்கு நல்ல உடல்வாகு இருக்கும். ஆனால் நடிப்பு வராது. சிலருக்கு நன்கு நடிக்க வரும். ஆனால் உடல்வாகு இருக்காது. சட்டையைக் கழற்றவே தயங்குவார்கள். ஆனால் சூர்யா மட்டுமே இவை இரண்டும் இணைந்த கலவையாக இருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு நடிகரை இதுவரை நான் பார்த்ததே இல்லை என்று கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.
No comments:
Post a Comment