BEST MOVIE OF SURYA

Sunday, June 6, 2010

JYOTHIKA DELIVERS A BABY




Suriya and Jyothika are on cloud nine with Jo delivering a male baby early this morning (June 7th 2010). The time of birth is given to be 4:03 am. The couple got married on September 11, 2006 and has a daughter named Diya. With the latest addition, it is time for celebration for the family, friends and fans of Suriya and Jo! Behindwoods.com congratulates the proud parents!.

விஜய்யை ஓரங்கட்டிய சூர்யா




ர‌ஜினிக்குப் பிறகு விஜய் படங்கள்தான் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்தது. இந்த இரண்டாவது இடத்தை தற்போது கைப்பற்றியிருப்பவர் சூர்யா.

சூர்யா நடிப்பில் வெளிவந்த அயன் சென்ற வருடம் வெளியான படங்களில் அதிக லாபம்
சம்பாதித்த படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. ஜக்குபாய் அளவுக்கு மோசம் என்றாலும் ஆதவன் முதலுக்கு மோசம் செய்யவில்லை.

இந்த வருடம் சிங்கம் வெளியாகியிருக்கிறது. ஏ, பி, சி என்று அனைத்து சென்டர்களிலும் சிங்கம் வசூலில் ‌சீறிப் பாய்கிறது. திரையரங்குகளில் நிரந்தரமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது ஹவுஸ்ஃபுல் போர்ட்.

சூர்யா படமென்றால் கமர்ஷியலாக இருந்தாலும் தனது கதாபாத்திரத்துக்காக கடுமையாக உழைத்திருப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உள்ளது. அந்த நம்பிக்கை இதுவரை சேதாரமாகாமல் இருப்பதால் திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன.

‌விஜய்யின் சுறா சென்னையில் எந்த திரையரங்கிலும் ஓடவில்லை. சுறா வெளியான திரையரங்குகள் அனைத்தையும் சிங்கம் ஆக்கிரமித்துள்ளது. விஜய் ஓரங்கட்டப்பட்டதை சிங்கத்தின் கலெ‌க்சன் கர்ஜனை உறுதி செய்வதாக விமர்சகர்கள் கருத்து தெ‌ரிவிக்கிறார்கள்.

சூர்யா - ஜோதிகாவுக்கு அடுத்த வாரம் 2வது குழந்தை




நிறைமாத கர்ப்பமாக உள்ள நடிகை ஜோதிகாவுக்கு அடுத்த வாரம் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தேதி குறித்துக் கொடுத்துள்ளனராம்.

நடிகர் சூர்யா, ஜோதிகா இருவரும் நீண்ட காலமாக காதலித்து பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் மணம் புரிந்து கொண்டனர். திருமணமான கையோடு அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தியா என்று பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜோதிகா மீண்டும் கர்ப்பமானார். தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ள ஜோதிகாவுக்கு அடுத்த வாரம் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 2வது குழந்தையை வரவேற்க சூர்யா குடும்பத்தினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

அரசுக்காக சூர்யா நடித்த குறும்படம்





தமிழ் சினிமாவின் தற்போது வெற்றி நாயகனாக திகழும் சூர்யா, அவ்வப்போது சமூககத்திற்காகவும் சில நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அவரின் அறக்கட்டளையின் மூலம் ஏழை மாணவர்களின் படிப்பிற்காக உதவுவது போன்ற நல்ல செயல்களில் ஈடுபட்டு வரும் சூர்யா தமிழக அரசுக்காக குறும்படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

சாலை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பின்பற்றப்பட வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கமும் இணைந்து ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளது. இதில் சூர்யா நடித்திருக்கிறார்.

இந்த குறும்படத்தை இன்று (மே 28) தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தலைமைச் செயலத்தில் பார்வையிட்டார். (டிஎன்எஸ்)

சூர்யா - கார்த்தியுடன் கைகோர்க்கும் சன்



சூர்யா மற்றும் கார்த்தி இருவரையும் சேர்த்து ஒரு புதிய படத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படங்கள்தான் இனி கோலிவுட்டில் ஜெயிக்கும் என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் கூறிவரும் நிலையில், அதற்கு செயல்வடிவம் தரும் வகையில், தனது அடுத்த படத்தை சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தியை இணைத்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளது சன்.

வழக்கம்போல வாங்கி விற்கும் படமாக இல்லாமல், எந்திரனுக்கு அடுத்து சொந்தமாக சன் தயாரிக்கும் படமாக இருக்கும் என்கிறார்கள்.

இயக்குநர், ஹீரோயின் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விரைவில் அறிவிக்கவிருக்கின்றனர்.

சூர்யா இப்போது ரத்த சரித்திரம், ஏழாம் அறிவு படங்களிலும், கார்த்தி நான் மகான் அல்ல உள்ளிட்ட 3 படங்களிலும் நடிக்கிறார்கள். இந்தப் படங்கள் படங்கள் முடியும் வரை காத்திருக்காமல் இடையிலேயே படப்பிடிப்புத் துவங்கும் எனத் தெரிகிறது.